ஆக்கிரமிப்புகளை அகற்றுவார்களா?

Update: 2026-02-15 19:21 GMT

வேலூர் சைதாப்பேட்டை பி.டி.சி. ரோடு, சார்பனா மேட்டில் இருந்து வேலூர்-ஆற்காடு சாலைவரை இணைக்கும் முக்கியமான சாலையாக உள்ளது. ஓல்டு டவுன், சலவன்பேட்டை உள்ளிட்ட பகுதியில் இருந்து தோட்டப்பாளையம் செல்லும் மக்களும், பி.டி.சி. ரோட்டில் உள்ள கடைகளுக்கு வணிக பொருட்களை ஏற்றி செல்லும் சரக்கு வாகனங்களும், ஆக்கிரமிப்புகளின் பிடியில் உள்ள இந்த சாலையை பயன்படுத்த சிரமம் அடைகின்றனர். பெரிய மசூதி அருகே சாலையில் இரண்டு பக்கமும், பழைய பொருட்களை முட்டைகளில் கட்டி அடுக்கி வைத்துள்ளனர். சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜேஷ், வேலூர்.

மேலும் செய்திகள்