பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட செறியேரி பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் தெருவிளக்கு வசதி இல்லை. இதன் காரணமாக இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் அவசர தேைவகளுக்கு கூட வீடுகளை விட்டு வெளியே வர முடியாத நிலை உள்ளது. எனவே விரைவாக தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.