புதர் செடிகள் அகற்றப்படுமா?

Update: 2026-02-15 19:40 GMT

கோத்தகிரி கடைவீதி அருகே பொது மயானம் உள்ளது. இந்த மயானம் முழுவதும் புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து வனவிலங்குகளின் புகலிடமாக மாறி வருகிறது. இதனால் அங்கு இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய வருபவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. எனவே நகராட்சி நிர்வாகம் அந்த மயானத்தில் வளர்ந்துள்ள புதர் செடிகளை வெட்டி அகற்ற ஆவன செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்