ஆரணியை அடுத்த புதுப்பட்டு கிராமத்தில் பயனற்றுக்கிடக்கும் வானொலி அறையை அகற்றி விட்டு, அந்த இடத்தில் அங்கன்வாடி மையம் அமைத்துத் தர வேண்டும் அல்லது ரேஷன் கடை அமைத்துத் தர வேண்டும் எனக் கிராம மக்கள் நீண்ட நாள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஆனால் இன்று வரை மாவட்ட நிர்வாகமும், ஒன்றிய நிர்வாகமும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த இடம் தற்போது சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. இனியாவது, அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ராகவேந்திரன், ஆரணி.