ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் பகுதியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள அரசு தொடக்கப்பள்ளி உள்ளது.இங்கு 100-க்கும் மேற்ப்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர்.இந்தப் பள்ளி வளாகத்துக்குள் பழமையான புளியமரம் ஒன்று உள்ளது.அந்த மரத்தின் அடிப்பகுதி காய்ந்து, சாய்ந்து எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழலாம். அசம்பாவிதம் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மரத்தை அகற்றுவார்களா?
உமாசங்கர், பாணாவரம்