அரக்கோணம் புதிய பஸ் நிலைய பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அருகே அசோக் நகர் செல்லும் வழியில் உள்ள குழந்தைகள் அங்கன்வாடி மையத்தை சுற்றிலும் செடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது. அங்குள்ள கழிப்பிட கட்டிடத்தை பயன்படுத்த முடியாத படி காடுபோல் காணப்படுகிறது. இதனால் அங்கு விஷ பூச்சிகள் நடமாடுவதால் குழந்தைகள் அச்சப்படுகின்றனர். அசம்பாவிதம் நடக்கும் முன் அங்கன்வாடி மையம் அருகில் உள்ள செடி, கொடிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பொதுமக்கள், அரக்கோணம்.