புதர், மரங்களை அகற்றுவார்களா?

Update: 2022-11-27 10:34 GMT

வாலாஜாபேட்டை நகர எல்லை நுழைவு வாயில் பகுதியில் வாலாஜா, அம்மூர், சோளிங்கர் போகும் 3 சாலைகள் சந்திக்கும் கூட்ரோட்டின் மத்தியில் உள்ள மேடையில் அதிகளவில் செடிகள், புதர்கள் வளர்ந்துள்ளது. இரவில் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. சிக்னலும் ெதரியவில்லை. இரவில் அந்த வழியாக வருபவரிடம் வழிப்பறி நடக்கிறது. 3 சாலைகள் சந்திக்கும் இடத்தில் வைக்கப்பட்ட செடிகள், பெரிய மரமாக வளர்ந்துள்ளது. இதனால் வேர்கள் ஓடி சாலை சேதம் அடையும். எனவே நெடுஞ்சாலைத்துறையினர் செடிகள், புதர்கள், உயரமாக வளர்ந்த மரங்களை வெட்டி அகற்ற வேண்டும்.

-அழகர், வாலாஜா.

மேலும் செய்திகள்