அரக்கோணம் ஜோதி நகர் கல்யாண மண்டபம் தெருவின் பெயர் பலகை பெயர்த்து திருத்தணி சாலையின் ஓரத்தில் வைத்துள்ளனர். இதனால் அப்பகுதிக்கு புதிதாக முகவரி தேடி வருபவர்கள் இதனை கண்டு திருத்தணி சாலையில் தேடி அலைகின்றனர். இது குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியப்படுத்தி வருகின்றனர். எனவே, உரிய இடத்தில் தெருவின் பெயர் பலகையை வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டில்லிபாபு, அரக்கோணம்