கீழ்பென்னாத்தூர் கூட்டுறவு சங்கம் மூலம் ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. அதில் ஒரு கடைக்கு 700 குடும்ப அட்டைகளும், 2-வது கடைக்கு 1,600 குடும்ப அட்டைகளும் உள்ளன. இந்த நிலையில் 3-வதாக ஒரு ரேஷன் கடை கட்டப்பட்டு, இன்னும் திறக்கப்படாமல் 2 ஆண்டுகளாக பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அந்த ரேஷன் கடையை திறந்து மக்கள் பயன்பாட்டுக்கு விட வேண்டும்.
-எஸ்.ஆறுமுகம், கீழ்பென்னாத்தூர்.