அங்கன்வாடி மையம் கட்ட முன்வருவார்களா?

Update: 2023-04-12 11:42 GMT

கலசபாக்கம் தாலுகா விண்ணுவாம்பட்டு பகுதியில் அங்கன்வாடி மையம் 30 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. அந்த அங்கன்வாடி மையத்தின் மேற்கூரை சிதிலமடைந்ததால், அரசு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, அந்த மையத்தை இடித்து தரைமட்டமாக்கினர். இடிக்கப்பட்ட இடத்தில் புதிதாக அங்கன்வாடி மைய கட்டிடம் கட்ட இன்னும் பணியை தொடங்கவில்லை. தற்போது அங்கன்வாடி மையம் ஒருதனியார் மண்டபத்தில் செயல்பட்டு வருகிறது. அங்கு குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அங்கன்வாடி மையத்ைத கட்டுவார்களா?

-பொதுமக்கள், விண்ணுவாம்பட்டு. 

மேலும் செய்திகள்