சோளிங்கர் நகராட்சியில் குற்றங்களை கண்காணிக்கவும் குற்றச் சம்பவங்களை தடுக்கவும் ரூ.32 லட்சம் மதிப்பில் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. ஆனால் பொருத்தப்பட்ட ஒரு சில வாரங்களில் இருந்தே பெரும்பாலான கண்காணிப்பு கேமராக்கள் அந்தக் கம்பத்தின் அடிப்பகுதியை பார்ப்பது போல வளைந்துள்ளன. இதனால் எந்த ஒரு குற்றச் சம்பவங்களையும் கண்காணிக்க முடியாது. பெயரளவில் மட்டுமே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
-மதுசூதனன், சோளிங்கர்.