ஒடுகத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுத்தம் செய்ய ஆட்கள் இருந்தும் கழிவறைகள் கேட்பாரற்று உள்ளது. கழிவறைகள் சுத்தமாக இல்லாததால் நோயாளிகள் அங்கு செல்வதே இல்லை. நோயாளிகள் திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். கழிவறைகளை சுத்தம் செய்து தண்ணீர் வசதி செய்து கொடுக்க மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
-கந்தவேல், அணைக்கட்டு.