ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரத்தில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவில் மருத்துவர் இல்லை. இரவில் நாய் கடி மற்றும் தேள், பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகள் கடித்து விட்டால் முறையான சிகிச்சை அளிக்கப்படுவது இல்லை. தலைமை செவிலியர் பாராசிட்டமல் மாத்திரையை கொடுத்து மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கிறார். அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு பணியில் ஒரு டாக்டரை நியமிக்க மருத்துவத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ம.வெ.சுதாகர், கூத்தம்பாக்கம்.