வேகத்தடை அமைக்கப்படுமா?

Update: 2022-11-23 11:22 GMT

வேலூரில் பல்வேறு இடங்களில் சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி சத்துவாச்சாரி ஆர்.டி.ஓ.சாலை, 5-வது பிரதான சாலை உள்ளிட்ட இடங்களில் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை சந்திப்புகளில் வேகத்தடை இல்லாதது விபத்துகளுக்கு வழிவகுக்கும் வகையில் உள்ளது. வேகமாக பலர் இருசக்கர வாகனங்களில் செல்கின்றனர். முதியவர்கள், பள்ளி மாணவ- மாணவிகள் இதனால் அச்சம் கொள்கின்றனர். நேருக்கு நேர் வாகனங்கள் மோதும் சூழல்களும் ஏற்பட்டுள்ளது. விபரீதம் ஏற்படும் முன்பு அனைத்து சந்திப்புகளிலும் வேகத்தடை அமைக்கப்பட வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.

-தணிகைவேலன், சத்துவாச்சாரி.

மேலும் செய்திகள்