வேலூர் சத்துவாச்சாரி ஆஞ்சநேயர் கோவில் அருகே இருந்த பயணிகள் நிழற்குடை கடந்த சில நாட்களுக்கு முன்பு பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டது. இதற்கு அந்தப் பகுதியில் உள்ள மாநகராட்சி வணிக வளாகத்தின் முகப்பு தோற்றத்தை பயணிகள் நிழற்குடை மறைக்கிறது. அதனால் அவை அங்கிருந்து அகற்றப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது. வேலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு பல்வேறு விஷயங்களுக்காக வரும் மக்கள் புதிய, பழைய பஸ்நிலையம் செல்ல வேண்டும் என்றால் ஆஞ்சநேயர் கோவில் அருகே வந்து தான் பஸ் ஏற வேண்டும். தற்போது நிழற்குடை இல்லாததால் பயணிகள் வெயில் மற்றும் மழையில் நனையும் சூழ்நிலை காணப்படுகிறது. இதனை தவிர்க்க கலெக்டர் அலுவலக மேம்பாலம் அருகே உள்ள உயர்கோபுர மின்விளக்கின் அருகில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும்.
-முத்துக்குமார், சத்துவாச்சாரி வேலூர்.