பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட பொட்டசிறாவில் இருந்து அம்மன்காவு, பந்தப்பிளா வழியாக பொன்னானி செல்லும் சாலையில் பொன்னானி பாலம் வரை இருபுறமும் முட்புதர்கள் அடர்ந்து வளர்ந்து உள்ளன. அங்கு காட்டுயானை, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் நின்றாலும் தெரிவது இல்லை. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் வனவிலங்குகள் தாக்குதலுக்கு ஆளாகும் நிலை உள்ளது. இதன் காரணமாக அப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே அங்குள்ள முட்புதர்களை வெட்டி அகற்ற வேண்டும்.