தேங்கும் மழைநீரால் அவதி

Update: 2026-02-01 19:04 GMT

அன்னூர் தாலுகா கோவில்பாளையம் அருகே கோட்டைபாளையம் பகுதியில் உள்ள ராயல் கார்டன் பேஸ்-1 பகுதியில் மழைநீர் குளம் போல் தேங்கி வருகிறது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு ேநாய் தொற்று பரவும் அபாயம் காணப்படுகிறது. அத்துடன் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகளின் நடமாட்டமும் அதிகரித்து வருகிறது. இளதனால் அப்பகுதி பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். அங்கு போதிய தெருவிளக்கு வசதியும் இல்லை. எனவே இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்