திருப்பத்தூரில் ரெயில் நிலைய சாலை, ஈத்கா ரோடு, புதிய பஸ் நிலைய பகுதி, அண்ணாநகர், பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித்திரிகின்றன. வீதிகளில் நடந்து செல்ல பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் அச்சப்படுகின்றனர். பொதுமக்களுக்கு ெதால்லை கொடுத்து வரும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆறுமுகம், திருப்பத்தூர்.