நுழைவுவாயில் இல்லாத அரசு பள்ளி

Update: 2026-07-12 14:19 GMT

ஆட்டையாம்பட்டி-காகாபாளையம் பிரதான சாலையோரம் தானகுட்டிபாளையம் அரசு நடுநிலைப்பள்ளி திறந்தவெளியில் இயங்கி வருகிறது. இதில் 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிக்கு நுழைவு வாயில் அமைக்கப்படவில்லை. இதனால் மாணவர்கள் ஆபத்தை உணராமல் சாலையோரம் விளையாடுகின்றனர். மேலும் பள்ளி வளாகத்திற்குள் கால்நடைகள் சுற்றித்திரிகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளிக்கு நுழைவுவாயில் அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்