ரேஷன் கடை முன் நிறுத்தப்படும் வாகனங்கள்

Update: 2026-07-12 14:07 GMT

திருச்சி தென்னூர் பாபு செட்டித் தெருவில் உள்ள ரேஷன் கடைகளின் முன்பாக சிலர் தங்களது வாகனங்களை நீண்ட நேரம் ஆக்கிரமித்து நிறுத்திச் செல்கின்றனர். இதனால் பொருட்கள் வாங்க வரும் முதியவர்களும், பெண்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், ரேஷன் பொருட்களை ஏற்றி வரும் லாரிகள் கடைக்கு அருகே வர முடியாமல் தூரத்திலேயே நிறுத்தப்படுவதால், சுமை தூக்கும் தொழிலாளர்களும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, பொதுமக்களுக்கு இடையூறாக வாகனங்களை ஆக்கிரமித்து நிறுத்துவோர் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்