பயனற்ற பயணிகள் நிழற்கூடம்

Update: 2026-07-12 14:05 GMT

கரூர் மாவட்டம், வேட்டமங்கலம் ஊராட்சி நொய்யல் அருகே குறுக்குச்சாலை பகுதியில், தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் கட்டப்பட்ட பயணிகள் நிழற்கூடம் பஸ்கள் நிற்கும் இடத்திற்குச் சற்று தொலைவில் உள்ளதால், முற்றிலும் பயனற்றுப் போயுள்ளது. அங்கு பஸ்கள் நிற்காததால் பயணிகள் யாரும் அதைப் பயன்படுத்துவதில்லை. மாறாக, அவ்விடம் மது அருந்தும் கூடமாக மாறி இரவு நேரங்களில் பெண்கள் அவ்வழியாக செல்ல அச்சப்படும் சூழல் நிலவுகிறது. எனவே, இந்த பயணிகள் நிழற்கூடம் அருகே பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்