அரசு அலுவலக சுவர்களில் சுவரொட்டி ஒட்டலாமா?

Update: 2026-07-12 14:10 GMT

சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் அரசு தொடக்கப்பள்ளியும், பனமரத்துப்பட்டியில் இருந்து சேலம் செல்லும் சாலையில் பேரூராட்சி அலுவலகம் அருகே அரசு மேல்நிலைப்பள்ளியும், பனமரத்துப்பட்டி வருவாய் ஆய்வாளர் அலுவலகம் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இதில் பள்ளி மற்றும் அரசு அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுச்சுவர்களில் தனியார் மற்றும் அரசியல் கட்சியினர் தங்களது விளம்பர போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். அரசு அலுவலகம் மற்றும் பள்ளி சுவர்களில் போஸ்டர் ஒட்டுவதை தடுத்து விளம்பர போஸ்டர் ஒட்டுபவர்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்