நாமக்கல் மாநகராட்சி 13-வது வார்டு, அஜிஸ் தெரு பகுதியில் கொசுத் தொல்லை மிக அதிகமாக உள்ளது. இந்த பகுதியில் உள்ள பல காலி மனைகளில் புதர் மண்டி, முட்புதர்கள் வளர்ந்து காடுபோல் காட்சியளிக்கிறது. அந்த பகுதியில் தெருநாய்கள், பாம்புகள் மற்றும் பல வகையான விஷப் பூச்சிகளும் அதிகமாக நடமாடுகின்றன. மேலும் அவ்வழியாக செல்வோர் மக்காத குப்பைகளை கொண்டுவந்து அங்கு வீசி செல்கின்றனர். இதனால் பொதுமக்களுக்கு பல்வேறு தொற்றுநோய்கள் ஏற்பட்டு வருகிறது. எனவே மாநகராட்சி சார்பில் முட்புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.