பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் மருவத்தூர் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இவற்றுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனால், சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனைக்குத்தான் செல்ல வேண்டியுள்ளது. இதனால் உரிய நேரத்தில் கால்நடைகளுக்குச் சிகிச்சை அளிக்க முடியாமல் விவசாயிகளும், பொதுமக்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே, மருவத்தூர் கிராமத்தில் உள்ள பால்பண்ணைக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் மருத்துவக் குழுவினர் நேரில் வந்து கால்நடைகளுக்குப் பரிசோதனை செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.