காந்தி சிலை மீண்டும் அமைக்கப்படுமா?

Update: 2026-07-12 14:06 GMT

திருச்சி மாவட்டம், லால்குடி அரசு மருத்துவமனை அருகே ரவுண்டானா அமைப்பதற்காக அகற்றப்பட்ட காந்தி சிலை, பல ஆண்டுகள் ஆகியும் இன்னும் மீண்டும் நிறுவப்படாமல் மருத்துவமனை அறையிலேயே பூட்டி வைக்கப்பட்டுள்ளது. பணிகள் முடிந்ததும் சிலை மீண்டும் அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ரவுண்டானா பணிகள் அனைத்தும் முடிவடைந்த பிறகும் காந்தி சிலை அமைக்கப்படாமல் உள்ளது. எனவே, மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, அகற்றப்பட்ட காந்தி சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவ சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்