சவ ஊர்வலத்தில் பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு விதிக்கப்படுமா?

Update: 2025-03-23 19:09 GMT

செங்கம் டவுன் ஜீவானந்தம் தெருவில் தொடங்கி ராஜவீதி, பெருமாள் கோவில் தெரு, சிவன் கோவில் தெரு, துர்கையம்மன் கோவில் தெரு வழியாக உள்ள மிகக் குறுகலான தெருக்களில் சவ ஊர்வலங்கள் செல்கின்றன. அப்போது அதிக சத்தத்துடன் கூடிய பட்டாசுகள் வெடிப்பதால் அதிர்வுகள் ஏற்பட்டு வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள், மின்சாதனப் பொருட்கள் உடைகின்றன. கர்ப்பிணிகள், இதய நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே சவ ஊர்வலத்தில் பட்டாசுகள் வெடிக்க கட்டுப்பாடுகள் விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராம்குமார், செங்கம்.

மேலும் செய்திகள்