ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வேந்தோணி கண்மாய் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் கண்மாய் முழுவதும் காட்டு கருவேலமரங்கள் அதிகளவில் ஆக்கிரமித்து உள்ளது. மேலும் கண்மாயில் குப்பைகள் தேங்கி சுகாதார சீர்கேடுடன் காட்சியளிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்மாயில் ஆக்கிரமித்துள்ள காட்டு கருவேல மரங்களை அகற்றி தூர்வார உரிய நடவடிக்கை எடுப்பார்களா?