திமிரி அருகே காவனூர் பகுதியில் விவசாயிகள் சுமார் 1000 ஏக்கருக்கு மேல் விவசாயம் செய்து வருகின்றனர். அதில் வாழை, மஞ்சள், நெல் போன்றவை பிரதானமாக சாகுபடி செய்யப்படுகிறது. நெல் அறுவடை செய்ததும் ஒழுங்கு முறை விற்பனை நிலையம் உள்ள அம்மூர், கலவை ஆகிய பகுதிகளுக்கு 25 கிலோ மீட்டர் தூரம் எடுத்துச் செல்லும் அவல நிலை உள்ளது. இல்லையெனில், விவசாயிகள் தனியாரிடம் நெல்லை விற்க வேண்டிய நிலை உள்ளது. எனவே காவனூர் பகுதியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.
-சுப்பிரமணியம், காவனூர்.