நாய்கள் தொல்லை

Update: 2026-08-02 19:30 GMT

கோவில்பட்டி ஸ்டேட் வங்கி காலனி பகுதியில் இரவு நேரத்தில் அதிகளவில் தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. அவை நள்ளிரவில் சாலையில் உலா வந்து சத்தமாக குரைக்கின்றன. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் இரவில் படிப்பதற்கு இடையூறாக இருக்கிறது. மேலும் சாலைகளில் குறுக்கே ஓடும் நாய்களால் விபத்து அபாயமும் ஏற்பட்டுள்ளது. நாய்களை பிடிக்க நகராட்சி நடவடிக்கை எடுக்குமா?

மேலும் செய்திகள்