பேட்டை ம.தி.தா. இந்து கல்லூரி அருகில் உள்ள அப்துல் லத்தீப் நகர் பகுதியில் அதிகாலை நேரத்தில் மயில்கள் ஏராளமாக சுற்றித்திரிகின்றன. இவை அனைத்தும் கல்லூரிகளில் உள்ள மரங்களில் குடியிருந்து வருகின்றன. கடந்த சில நாட்களாக அவற்றை வேட்டையாடி பிடிப்பதற்காக சிலர் முயற்சி செய்து வருகின்றனர். எனவே இந்த மயில்களை பாதுகாக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.