திண்டுக்கல்லை அடுத்த பள்ளப்பட்டி அருகே கொட்டப்பட்டி வைக்கோ நகரில் உள்ள சாக்கடை கால்வாய் பாலம் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் வைக்கோ நகருக்குள் வாகன ஓட்டிகள் செல்ல பெரும் சிரமப்படுகின்றனர். மேலும் பள்ளி மாணவர்கள், முதியோர்கள் அந்த பாலம் பகுதியில் நடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே சாக்கடை கால்வாய் பாலத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும்.