நெமிலியை அடுத்த மேலேறி ஊராட்சி அரசங்குப்பம் ஆதிதிராவிடர்கள் குடியிருப்பு பகுதி, முருகன் நகர் பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. நாய்களால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தெருக்களில் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். வாகனங்களில் செல்வோரை துரத்தி கடிக்க பாய்கின்றன. நாய்களை பிடித்து கருத்தடை செய்ய வேண்டும். அத்துடன் வெறிநோய் தடுப்பூசி நாய்களுக்கு போட வேண்டும்.
-பழனிவேல், நெமிலி.