நாய்கள் தொல்லை

Update: 2026-08-02 17:36 GMT
திருமாணிக்குழியில் நாளுக்கு நாள் நாய்கள் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இவை இரவு வேளையில் சாலையில் செல்லும் வாகனஓட்டிகள் மற்றும் பொதுமக்களை கடிக்க விரட்டுகின்றன. இதனால் வாகனஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்கிவருகின்றனர். மேலும் அவ்வழியாக பொதுமக்கள் ஒருவித அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்