திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் அருகே அழகர்சிங்கம்பட்டி பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகம் உள்ளது. அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், வாகன ஓட்டிகள் ஆகியோரை தெருநாய்கள் துரத்திச்சென்று அச்சுறுத்துகிறது. எனவே பொதுமக்களை அச்சுறுத்தும் தெருநாய்களை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.