குடிமகன்களால் அச்சம்

Update: 2026-08-02 17:44 GMT
பழனி தாலுகா, இராஜாபுரம் செல்லும் வழியில் அமைந்துள்ள சாத்தான் ஓடை பாலம், தற்போது திறந்தவெளி மதுபானக்கூடமாக மாறியுள்ளது. குடிகாரர்கள் எந்நேரமும் இங்கு அமர்ந்து மது அருந்தி, அவ்வழியே செல்லும் மக்களிடம் தகராறில் ஈடுபடுகின்றனர். இதனால் பள்ளி, கல்லூரி மாணவ/மாணவிகள் மற்றும் பெண்கள் அச்சத்துடன் இவ்வழியே செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. மேலும், இங்கு நிறுத்தப்படும் வாகனங்களில் இருந்து பெட்ரோல் திருடப்படுவதால், வாகனங்களை நிறுத்திவிட்டு வயலுக்குச் செல்லும் விவசாயிகள் பெரும் அச்சத்துடனே வாழ்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இப்பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும்.

மேலும் செய்திகள்