தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தனி தாலுகாவாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இங்கு அனைத்து வசதிகளும் கொண்ட அரசு ஆஸ்பத்திரி இல்லை. இப்பகுதியில் விபத்து உள்ளிட்ட அவசர மருத்துவ தேவைக்கு சங்கரன்கோவில், கோவில்பட்டி போன்ற ஊர்களுக்கு தான் அனுப்பி வைக்கப்படுகிறார்கள். எனவே இங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி அரசு பொது மருத்துவமனையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.