சுகாதாரமற்ற கழிப்பிடம்

Update: 2026-03-15 09:49 GMT

பந்தலூர் அருகே அய்யன்கொல்லி பகுதியில் பொது கழிப்பிடம் உள்ளது. இது தமிழக-கேரள எல்லையில் உள்ளதால், இரு மாநில மக்களும் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் கழிப்பிடம் முறையான பராமரிப்பு இல்லாமல் காணப்படுகிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. இதன் காரணமாக அந்த கழிப்பிடத்தை பயன்படுத்தும் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே அந்த கழிப்பிடத்தை முறையாக பராமரிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்