திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வட்டம் திருவாலங்காடு ஒன்றியத்தில் உள்ள பெரியகளக்காட்டூர் ஊராட்சியில் உள்ள சின்னகளக்காட்டூர் கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி நுழைவு வாயில் இல்லாமல் இருந்தது.இதுதொடர்பாக 'தினத்தந்தி' புகார் பெட்டியில் கடந்த வாரம் படத்துடன் செய்தி வெளியானது. சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகள் உடனடி நடவடிக்கையாக பள்ளிக்கு நுழைவு வாயில் அமைத்தனர். உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், அதற்கு தூண்டுதலாக நின்ற 'தினத்தந்தி' பத்திரிகைக்கும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டை தெரிவித்துள்ளனர்.