அந்தியூர் பிரம்மதேசம் அருகே காட்டுப்பாளையம் பகுதியில் உள்ள ஏரிக்கரையின் இருபுறமும் சீமைக்கருவேல மரங்கள் மற்றும் வேலி மரங்கள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து விவசாய தோட்டங்களும், சுற்றுச்சூழலும் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. எனவே புதரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.