ஆற்றை தூர்வார வேண்டும்

Update: 2026-06-21 20:11 GMT

பேரணாம்பட்டை அடுத்த சாத்கர் ஊராட்சியில் அமைந்துள்ள பார்த்தபாளையம் கிராமத்தில் இருந்து தொடங்கி ஆம்பூர் ஆற்றில் கலக்கும் ஆறு உள்ளது. அந்த ஆற்றில் சாக்கர் ஊராட்சி பகுதியில் இருந்தும், பேரணாம்பட்டு நகராட்சி பகுதியில் இருந்தும் சேகரிக்கப்படும் குப்பைகளை கொண்டு வந்து கொட்டி கால்வாய் அகல பரப்பை குறுக்கி விட்டார்கள். ஆற்றை தூர்வார கோரி மனு அளிக்கப்பட்டது. ஆனால், அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. ஆற்றில் குப்பைகள் கொட்டுவதை தடுக்கவும், ஆற்றை தூர்வாரவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-நா.சே.பாஸ்கர், சமூக ஆர்வலர், பேரணாம்பட்டு.

மேலும் செய்திகள்