குன்னத்தூர்-கோபி சாலையில் செட்டிகுட்டை பிரிவில் பயணிகள் நிழற்குடை உள்ளது. இந்த நிழற்குடை பல வருடங்களுக்கு மேலாக சேதம் அடைந்து காணப்படுகிறது. மேலும், ஆங்காங்கே விரிசல் விழுந்தும், சிமெண்டு தரை தளம் பெயர்ந்தும் ஆபத்தான நிலையில் உள்ளது. இது மட்டுமல்லாமல் குப்பைகள் சூழ்ந்து கிடப்பதால் அதிக துர்நாற்றம் வீசுவதுடன், நாற்காலிகளும் பழுதடைந்து காணப்படுகிறது. மேலும் இந்த நிழற்குடையை சுற்றிலும் அதிக அளவு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. சுகாதாரம் இன்றி துர்நாற்றம் வீசுவதால் பயணிகள் உள்ளே சென்று அமர்வதை தவிர்த்து வருகின்றனர். இதனால் வெயிலுக்கும், மழைக்கும் கூட பயன்படுத்த முடியாத நிலையில் நிழற்குடை உள்ளது. எனவே நிழற்குடையை சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.