ஆரம்ப சுகாதர நிலையம் வேண்டும்

Update: 2026-08-16 13:57 GMT

செங்கல்பட்டு மாவட்டம், நெய்குப்பி ஊராட்சி பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும். இப்பகுதியில் அணுசக்தித் துறை ஊழியர்களின் குடியிருப்புகள் அதிகளவில் உள்ளன. மேலும், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிபவர்கள் மற்றும் பணி ஓய்வு பெற்றவர்கள் சொந்த வீடுகள் கட்டி நிரந்தரமாக வசித்து வருவதால், இப்பகுதியில் மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மருத்துவ சிகிச்சைக்காக திருக்கழுக்குன்றம் செல்ல வேண்டிய சூழல் உள்ளது. இதனால் அவசர காலங்களில் சிகிச்சை பெறுவதில் கடும் சிரமம் ஏற்படுகிறது. எனவே, பொதுநலன் கருதி நெய்குப்பி பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்