தெருநாய்கள் அச்சுறுத்தல்

Update: 2026-08-16 14:13 GMT

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் கோபாலப்பட்டிணம் பகுதியில் தெருநாய்களின் பெருக்கம் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மற்றும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் பெரிதும் அச்சுறுத்தலுக்கு ஆளாகி வருகின்றனர். கூட்டமாக சுற்றித்திரியும் தெருநாய்கள் மாணவ, மாணவிகளையும், கால்நடைகளையும் விரட்டி தாக்குவதால் மாலை நேரங்களில் வெளியே செல்லவே அச்சப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தொல்லை தரும் தெருநாய்களை பிடித்து கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்