பராமரிக்கப்படாத கழிப்பிடம்

Update: 2026-08-16 14:05 GMT

நீலகிரி மாவட்டம் அய்யன்ெகால்லி பகுதியில் பொது கழிப்பிடம் உள்ளது. இந்த கழிப்பிடத்தை பலரும் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் உரிய முறையில் பராமரிக்கப்படுவது இல்லை. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு நிலவுகிறது. இதன் காரணமாக அந்த கழிப்பிடத்தை பயன்படுத்தி வருபவர்கள் கடும் அவதிப்படுகிறார்கள். அவர்களுக்கு நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. எனவே அந்த கழிப்பிடத்தை முறையாக பராமரிக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்