சென்னை பெரம்பூர், பாரதி சாலை, ஆனந்தவேல் 1-வது குறுக்கு சாலை ஓரத்தில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சாலையின் மற்றொரு புறத்தில் பழைய பேப்பர் கடை உள்ளது. அந்த கடைகளின் பழைய பொருட்கள் சாலை ஓரத்தில் கிடப்பதால், சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளால் இந்த சாலை வழியாக வாகனங்கள் செல்வதற்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. மேலும், அருகில் உள்ள மாநகராட்சி பூங்காவிற்கு பொதுமக்கள் செல்வதற்கான வழியும் மறைக்கப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, மாநகராட்சி அதிகாரிகள் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.