மதுரை நகர் பகுதியில் உள்ள முக்கிய சாலைகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கால்நடைகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றது. மேலும் இரவு நேரங்களில் சில கால்நடைகள் ஆங்காங்கே சாலையின் நடுவே அமர்ந்துக்கொள்வதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் அதிகளவில் உள்ளதால் மாவட்ட நிர்வாகம் விரைந்து மேற்கண்ட பகுதி சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து அப்புறப்படுத்துவார்களா?