காவேரிப்பட்டணம் அடுத்த குண்டலப்பட்டி கிராமம் கூட்ரோடு கள்ளுக்கடை பகுதியில் சாலை, கழிவுநீர் கால்வாய் போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் இதுவரை செய்துதரப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் மழைக்காலங்களில் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் பலன் இல்லை. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்து அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.