நோய் தொற்று பரவும் அபாயம்

Update: 2026-08-16 13:37 GMT

சென்னை மாத்தூர், எம்.எம்.டி.ஏ. 3-வது பிரதான சாலை ஓரத்தில் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன. இந்த குப்பைகள் நீண்ட நாட்களாக அகற்றப்படாமல் இருப்பதால், அந்த வழியாக செல்லும் மாடுகள் குப்பைகளை உண்கின்றன. சாலையில் குப்பைகள் பரவி கிடப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், குப்பைகளால் அப்பகுதி மக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் நிலவுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு, அந்த பகுதியில் குவிந்துள்ள குப்பைகளை அகற்ற வேண்டும். அத்துடன், அப்பகுதியில் புதிய குப்பை தொட்டிகளை அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்