அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் பஸ் நிலையத்திற்கு தினமும் நூற்றுக்கணக்கான பஸ்களும், ஆயிரக்கணக்கான பயணிகளும் வந்து செல்கின்றனர். இந்த நிலையில், பஸ் நிலைய வளாகத்தில் இரவு நேரத்தில் அதிகளவில் தெருநாய்கள் சுற்றி வருகின்றன. கூட்டம் கூட்டமாக சுற்றி வரும் இந்த தெருநாய்கள் பயணிகளை அச்சுறுத்துகின்றன. மேலும், அவர்களை கடிக்கவும் பாய்கின்றன. இதன் காரணமாக பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் என அனைத்து தரப்பு மக்களும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.