பெரம்பலூர் வட்டம் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செங்குணம் கைகாட்டி பகுதியில் சாலையோரம் நடப்பட்டுள்ள 100-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் இயற்கைப் இடர்பாடுகளால் சாய்ந்து கூண்டுகள் சேதமடைந்து காணப்படுகின்றன. இதனால் அம்மரக்கன்றுகளின் வளர்ச்சி பாதிக்கப்படுவதுடன் அவை சேதமடையும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே சாய்ந்த மரக்கன்றுகளை நிமிர்த்தி முறையாக பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.